ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் – குறள்: 588

Thiruvalluvar

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும்ஓர்
ஒற்றினால் ஒற்றி கொளல்.
– குறள்: 588

– அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள்



கலைஞர் உரை

ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஓர் ஒற்றன் ஒற்றி வந்து அறிவித்த செய்திகளையும்; வேறும் ஓரொற்றனால் ஒற்றுவித்து ஒப்பு நோக்கி உண்மை யறிந்து கொள்க..



மு. வரதராசனார் உரை

ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்த செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டுவரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்று கொள்ள வேண்டும்.



G.U. Pope’s Translation

Spying by spies, the things they tell
To test by other spies is well.

 – Thirukkural: 588, Detectives, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.