குற்றமே காக்க பொருளாக – குறள்: 434

Thiruvalluvar

குற்றமே காக்க பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை. – குறள்: 434

அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள்கலைஞர் உரை

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தனக்கு அழிவை உண்டாக்கும் பகை தன்குற்றமே; ஆதலால் தன்னிடத்துக் குற்றம் வராமையையே பொருட்டாகக் கொண்டு காத்துவருக.மு. வரதராசனார் உரை

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும். ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ளவேண்டும்.G.U. Pope’s Translation

Freedom from faults is wealth; watch heedfully
‘Gainst these, for fault is fatal enmity.

 – Thirukkural: 434, The Correction of Faults , WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.