அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை – குறள்: 32

Thiruvalluvar

அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.
– குறள்: 32

– அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்கலைஞர் உரை

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவர்க்கு அறஞ்செய்வதிலும் சிறந்த ஆக்கவழியுமில்லை, அதை மறந்து செய்யாது விடுவதினும் பெரிய கெடுதல் வழியுமில்லை.மு. வரதராசனார் உரை

ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.G.U. Pope’s Translation

No greater gain than virtue aught can cause;
No greater loss than life oblivious of her laws.

 – Thirukkural: 32, Assertion of the strength of virtue, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.