நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் – குறள்: 710

நுண்ணியம் என்பார் அளக்கும்கோல்

நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால்
கண்அல்லது இல்லை பிற.
– குறள்: 710

– அதிகாரம்: குறிப்பறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நுண்ணியம் என்பார் அளக்கும் கோல்-யாம் நுண்ணறிவுடையேம் என்று தம்மைக் கருதும் அமைச்சர் அரசரின் கருத்தை அளக்குங் கோலாவது; காணுங்கால் கண் அல்லது பிற இல்லை-ஆராயுமிடத்து அவ்வரசர் கண்ணன்றி வேறில்லை.



மு. வரதராசனார் உரை

யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவருடைய கண்களே அல்லாமல் வேறு இல்லை.



G.U. Pope’s Translation

The men of keen discerning soul no other test apply
(when you ask their secret) than man’s revealing eye
.

 – Thirukkural: 710, The Knowledge of Indications, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.