கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே – குறள்: 332

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
– குறள்: 332

– அதிகாரம்: நிலையாமை, பால்: அறம்கலைஞர் உரை

சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுக்குப் பெருஞ்செல்வஞ் சேர்வது ஆடலரங்கிற்குக் காண்போர் கூட்டம் வந்து கூடுவது போன்றதே; அச்செல்வங் கெடுவதும் அவ்வாடல் முடிந்தபின் அக்கூட்டங் கலைவது போன்றதே.மு. வரதராசனார் உரை

பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடுமிடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது; அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.G.U. Pope’s Translation

As crowds round dancers fill the hall, is wealth’s increase;
It’s loss, as throngs dispersing, when the dances cease.

 – Thirukkural: 332, Instability, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.