நோவற்க நொந்தது அறியார்க்கு – குறள்: 877

Thiruvalluvar

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து
. குறள்: 877

– அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள்.



கலைஞர் உரை

தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தான் துன்புற்றதை அறியாத நண்பர்க்குத் தன் துன்பத்தைச் சொல்லற்க; வலியின்மைபார்த்திருக்கும் தன் பகைவரிடம் தன் வலிமையின்மையை மேலிட்டுக்கொள்ளற்க.



மு. வரதராசனார் உரை

துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது; பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக்கூடாது.



G.U. Pope’s Translation

To those who know them not, complain not of your woes; Nor to your foeman’s eyes infirmities disclose.

Thirukkural: 877, Knowing the Quality of Hate, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.