கருவியும் காலமும் செய்கையும் – குறள்: 631

Thiruvalluvar

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
– குறள்: 631

– அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள்



கலைஞர் உரை

உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்து செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வினைக்கு வேண்டுங் கருவிகளும்; அதற்கேற்ற காலமும், அதைச் செய்யும் வகையும்; அவ்வகையிற் செய்யும் அரிய வினையும்; வெற்றிபெற எண்ணும் ஆற்றலிற் சிறந்தவனே அமைச்சனாவான்.



மு. வரதராசனார் உரை

செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.



G.U. Pope’s Translation

A minister is he who grasps, with wisdom large. Means,time, work’s mode and functions rare he must discharge.

 – Thirukkural: 631, The Office of Minister of State, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.