பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் – குறள்: 275

Thiruvalluvar

பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்று
ஏதம் பலவும் தரும். – குறள்: 275

– அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம்



கலைஞர் உரை

எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த
வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறர் தம்மைப் பெரிதும் மதிக்குமாறு யாம் இருவகைப் பற்றும் துறந்தேம் என்று சொல்வாரின் மறைவொழுக்கம்; பின்புதம் தீவினைப் பயனை நுகரும்போது, அந்தோ என் செய்தேன் என் செய்தேன் என்று தனித்தனியே வருந்திப் புலம்புமாறு, அவருக்குப் பல்வகைத் துன்பங்களையும் உண்டாக்கும்.



மு. வரதராசனார் உரை

‘பற்றுக்களைத் துறந்தோம்’ என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம், என்ன செய்தோம் என்ன செய்தோம்’ என்று வருந்தும்படியான துன்பம் பலவும் தரும்.



G.U. Pope’s Translation

‘Our souls are free,’ who say, yet practise evil secretly, ‘What folly have we wrought!’ by many shames o’erwhelmed, shall cry.

 – Thirukkural: 275, Inconsistent Conduct, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.