நீங்கான் வெகுளி நிறைஇலன் – குறள்: 864

Thiruvalluvar

நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
குறள்: 864

– அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள்



கலைஞர் உரை

சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர்
வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சினத்தை விடாதவனாகவும்; அடக்கமில்லாதவனாகவு மிருப்பவன்மேற் செல்லுதல்; எக்காலத்தும் எவர்க்கும் எளிதாம்.



மு. வரதராசனார் உரை

ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால், அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.



G.U. Pope’s Translation

His wrath still blazes, every secret told; each day
This man’s in every place to every foe an easy prey.

Thirukkural: 864, The might of Hatred, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.