நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் சிறு படகாகும்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போடு உடன்உறைந் தற்று – குறள்: 890 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறியகுடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை மனப்பொருத்த [ மேலும் படிக்க …]
கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டுபுண்உடையர் கல்லா தவர். – குறள்: 393 – அதிகாரம்: கல்வி , பால்: பொருள் கலைஞர் உரை கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணுடைய [ மேலும் படிக்க …]
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னைமுன்நின்று கல்நின் றவர். – குறள்: 771 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை போர்க்களத்து வீரன் ஒருவன், “பகைவர்களே என் தலைவனைஎதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்” என முழங்குகிறான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment