நாணால் உயிரைத் துறப்பர் – குறள்: 1017

Thiruvalluvar

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாண்ஆள் பவர்.
– குறள்: 1017

– அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள்கலைஞர் உரை

நாண உணர்வுடையவர்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள
உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக
மானத்தை விடமாட்டார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நாணை உயிர்நாடிப் பண்பாகக் கொள்பவர்; நாணும் உயிருந் தம்முள் மாறானவிடத்து நாணைக் காத்தற் பொருட்டு உயிர் நீப்பர் ; உயிரை காத்தற் பொருட்டு நாணினை நீக்கார்.மு. வரதராசனார் உரை

நாணத்தைத் தமக்குரிய பண்பாகக் கொள்பவர், நாணத்தால் உயிரை விடுவார்; உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விடமாட்டார்.G.U. Pope’s Translation

The men of modest soul for shame would life an offering make, But ne’er abandon virtuous shame for life’s dear sake.

 – Thirukkural: 1017, Shame, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.