தானம் தவம்இரண்டும் தங்கா – குறள்: 19

Thiruvalluvar

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின். – குறள்: 19

– அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்கலைஞர் உரை

இப்பேருலகில் மழை பொய்த்துவிடுமானால் அது, பிறர் பொருட்டுச்
செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மழை பெய்யாவிடின்; வியன் உலகம் தானம் தவம் இரண்டும் இப் பரந்தவுலகின்கண் அறக்கொடையும் தவமும் ஆகிய இருவகை நல்வினைகளும் செய்யப்பெறா.மு. வரதராசனார் உரை

மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.G.U. Pope’s Translation

If heaven its watery treasures ceases to dispense,
Through the wide world ceases gifts, and deeds of ’penitence’.

 – Thirukkural: 19, The Excellence of Rain, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.