முனைமுகத்து மாற்றலர் சாய – குறள்: 749

Thiruvalluvar

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறுஎய்தி மாண்டது அரண்.
– குறள்: 749

– அதிகாரம்:அரண், பால்: பொருள்கலைஞர் உரை

போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளேயிருந்து
கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

போர்த் தொடக்கத்திலேயே பகைவர் புண்பட்டு விழுமாறு; நொச்சியாரின் வினைவேறுபாடுகளாற் சிறப்புப் பெற்று; மாண்டது பல்வேறு உறுப்புக்களாலும் மாட்சிமைப்பட்டதே சிறந்த கோட்டையரணாவது.மு. வரதராசனார் உரை

போர்முனையில் பகைவர் அழியும்படியாக (உள்ளிருந்தவர் செய்யும்) போர்ச் செயல் வகையால் பெருமை பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.G.U. Pope’s Translation

At outset of the strife a fort should foes dismay; And greatness gain by deeds in every glorious day.

 – Thirukkural: 749, The Fortification, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.