கெடும்காலைக் கைவிடுவார் கேண்மை – குறள்: 799

Thiruvalluvar

கெடும்காலைக் கைவிடுவார் கேண்மை அடும்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.
– குறள்: 799

– அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால்



கலைஞர் உரை

ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த
நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால்
அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுக்குக் கேடு நேர்ந்த காலத்து அவனை விட்டு நீங்குவார் முன்பு அவனோடு செய்த பொய்ந்நட்பு; அவன் தன்னைக்கூற்றுவன் கொல்லுங் காலத்து நினைப்பினும் அவன் உள்ளத்தைத் தீப்போற் சுடும்.



மு. வரதராசனார் உரை

கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.



G.U. Pope’s Translation

Of friends deserting us on ruin’s brink,
‘Tis torture e’en in life’s last hour to think.

 – Thirukkural: 799, Investigation formatting Friendships, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.