மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை – குறள்: 556

Thiruvalluvar

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.
– குறள்: 556

– அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள்கலைஞர் உரை

நீதிநெறி தவறாத செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும்.
இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசர்க்குப் புகழ் நிலைபெறுதல் செங்கோலாட்சியினாலேயே ;அச்செங்கோ லாட்சியில்லாவிடின் அவர்க்கு இம்மையிலும் பெயரும் மதிப்பும் இல்லாமற் போம்.மு. வரதராசனார் உரை

அரசர்க்குக் புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும். அஃது இல்லையானால் அரசர்க்குப் புகழ் நிலைபெறாமல் போகும்.G.U. Pope’s Translation

To rulers’ rule stability is sceptre right;
When this is not, quenched is the rulers’ light.

 – Thirukkural: 556, The Cruel Sceptre, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.