அறன்வரையான் அல்ல செயினும் – குறள்: 150

Thiruvalluvar

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. – குறள்: 150

– அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம்



கலைஞர் உரை

பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் அறத்தைத் தனக்கு உரியதாகக் கொள்ளாது தீவினைகளைச் செய்து வருவானாயினும் ; பிறனாட்சிக் குட்பட்டவளின் பெண்டன்மையை விரும்பாமையை அவன் மேற்கொள்ளின் அது அவனுக்கு நல்லதாம்.



மு. வரதராசனார் உரை

ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.



G.U. Pope’s Translation

Though virtue’s bounds he pass, and evil deeds hath wrought; At least, ’tis good if neighbour’s wife he covet not.

 – Thirukkural: 150, Not Coveting Another’s Wife, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.