கொக்குஒக்க கூம்பும் பருவத்து – குறள்: 490

kokkokka koombum kural

கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து.
– குறள்: 490

அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள்கலைஞர் உரை

காலம் கைகூடும் வரையில் கொக்குப்போல் பொறுமையாகக்
காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி
தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வினைமேல் செல்லாதிருக்குங் காலத்து மீன்தேடுங் கொக்குப்போல் ஒடுங்கியிருக்க ; மற்றுச் செல்லுங்காலம் வாய்த்த விடத்து அக்கொக்கு விரைந்து மீனைக்கொத்துவதுபோல் விரைந்து பகைவனைத் தாக்குக .மு. வரதராசனார் உரை

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல் அமைதியா இருக்கவேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்கவேண்டும்.G.U. Pope’s Translation

As heron stands with folded wing, so wait in waiting hour; As heron snaps its prey, when fortune smiles, put forth your power.

 – Thirukkural: 490, Knowing the fitting time, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.