கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை – குறள்: 808

Thiruvalluvar

கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள்இழுக்கம் நட்டார் செயின்.
– குறள்: 808

– அதிகாரம்: பழைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.

.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பழைமையான நண்பர் செய்த தவற்றைத் தாமாகவன்றிப் பிறர் சொன்னாலும் பொருட்படுத்தாத நட்புரிமையறிய வல்லார்க்கு; அந்நண்பர் தவறு செய்யின் அந்நாள் நன்னாளாம்.



மு. வரதராசனார் உரை

பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும் கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந் நண்பர் தவறு செய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.



G.U. Pope’s Translation

In strength of friendship rare of friend’s disgrace who will not hear,
The day his friend offends will day of grace to him appear.

Thirukkural: 808, Familiarity, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.