உள்ளற்க உள்ளம் சிறுகுவ – குறள்: 798

Thiruvalluvar

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
– குறள்: 798

– அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால்



கலைஞர் உரை

ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போதுவிலகிவிடக் கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்க்காமலே இருந்து விட வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம் ஊக்கங் குறைதற்குக் கரணியமான வினைகளைச் செய்யக் கருதா திருக்க; துன்பக் காலத்திற் கைவிடுவார் நட்பைக் கொள்ளாதிருக்க.



மு. வரதராசனார் உரை

ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்கவேண்டும்; அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.



G.U. Pope’s Translation

Think not the thoughts that dwarf the soul; nor take For friends the men who friends in time of grief forsake.

 – Thirukkural: 798, Investigation formatting Friendships, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.