கண்உடையர் என்பவர் கற்றோர் – குறள்: 393

கண்உடையர் என்பவர் கற்றோர்

கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்உடையர் கல்லா தவர். – குறள்: 393

– அதிகாரம்: கல்வி , பால்: பொருள்



கலைஞர் உரை

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கண்ணுடைய வரென்று சிறப்பித்துச் சொல்லப்படுவர் கற்றோரே; மற்றக் கல்லாதவரோ வெனின் தம் முகத்தில் இரண்டு கண்களையல்ல, புண்களையே உடையர்.



மு. வரதராசனார் உரை

கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.



G.U. Pope’s Translation

Men who learning gain have eyes, men say;
Blockheads’ faces pairs of sores display.

 – Thirukkural: 393,Learning, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.