கல்லாதான் சொற்கா முறுதல் – குறள்: 402

Thiruvalluvar

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று. – குறள்: 402

அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள்கலைஞர் உரை

கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத
பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கல்வியில்லாதவன் ஓர் அவையின்கண் சொற்பொழிவாற்ற விரும்புதல்; இயல்பாகவே முலையிரண்டுமில்லாத பேடி பெண்டன்மையை விரும்பினாற்போலும்..மு. வரதராசனார் உரை

(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது..G.U. Pope’s Translation

Like those who doat on hoyden’s undeveloped charms are they,
Of learning void, who eagerly their power of words display.

 – Thirukkural: 402, Ignorance, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.