புத்தேள் உலகத்தும் ஈண்டும் – குறள்: 213

புத்தேள் உலகத்தும் ஈண்டும்

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
– குறள்: 213

– அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம்



கலைஞர் உரை

பிறர்க்கு உதவிடும் பண்பாகிய “ஒப்புரவு” என்பதைவிடச் சிறந்த
பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒப்புரவு போன்ற நல்ல செயல்களை; தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல்; அரிதேயாம்.



மு. வரதராசனார் உரை

பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப்போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.



G.U. Pope’s Translation

To ‘due beneficence’ no equal good we know,
Amid the happy gods, or in this world below.

 – Thirukkural: 213, The Knowledge of What is Befitting a Man’s Position, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.