இல்லதென் இல்லவள் மாண்பானால் – குறள்: 53

Thiruvalluvar

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
– குறள்: 53

– அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம், பால்: அறம்கலைஞர் உரை

நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுடைய மனைவி நற்குண நற்செய்கைச் சிறப்புடையவளானால் அவனுக்கு இல்லாதது எது? அம்மனைவி அச்சிறப்பில்லாதவளானால் அவனுக்கு உள்ளது எது?மு. வரதராசனார் உரை

மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?G.U. Pope’s Translation

There is no lack within the house, where wife in worth excels, There is no luck with the house, where wife dishonoured dwells.

 – Thirukkural: 53, The Goodness of the help to Domestic Life, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.