இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று – குறள்: 905

Thiruvalluvar

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
குறள்: 905

– அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள்.கலைஞர் உரை

எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு
ஏற்பட்டுவிடக்கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல்
கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.

.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன் மனைவிக்கு அஞ்சி நடப்பவன்; தான் தேடிய பொருளைக்கொண்டும் நல்லவர்க்கு நல்லவை செய்ய எப்போதும் அஞ்சுவான்.மு. வரதராசனார் உரை

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.G.U. Pope’s Translation

Who quakes before his wife will ever tremble too,
Good deeds to men of good deserts to do.

Thirukkural: 905, Being led by Women, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.