இமையாரின் வாழினும் பாடுஇலரே – குறள்: 906

Thiruvalluvar

இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள்
அமைஆர்தோள் அஞ்சு பவர்.
குறள்: 906

– அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள்.



கலைஞர் உரை

அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள்
என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத்
தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம் மனைவியின் பசுமூங்கில் போலும் தோளிற்கு அஞ்சுபவர் ;போர்மறத்தால் விண்ணுலகடைந்த தேவர்போல் இவ்வுலத்தில் வாழ்ந்தாராயினும் உயர்ந்தோராற் பாராட்டப்பெறும் பெருமையில்லாதவரே.



மு. வரதராசனார் உரை

மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகத்தில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.



G.U. Pope’s Translation

Though, like the demi-gods, in bliss they dwell secure from harm, Those have no dignity who fear the housewife’s slender arm.

Thirukkural: 906, Being led by Women, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.