அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் – குறள்: 169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
– குறள்: 169

– அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம்கலைஞர் உரை

பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பொறாமை மனத்தானது செல்வமும்; செவ்வியான் கேடும் பொறாமை கொள்ளாத செவ்விய மனத்தானது வறுமை அல்லது துன்பமும்; எக்கரணியம் பற்றி நேர்ந்தன வென்று ஆராயப்படும்.மு. வரதராசனார் உரை

பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.G.U. Pope’s Translation

To men of envious heart, when comes increase of joy, Or loss to blameless men, the ‘why’ will thoughtful hearts employ.

 – Thirukkural: 169, Not Envying, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.