நாநலம் என்னும் நலனுடைமை – குறள்: 641

நாநலம் என்னும் நலனுடைமை

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
– குறள்: 641

– அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள்கலைஞர் உரை

சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நாநலம் என்று அறிவுடையோரால் உயர்வாகச் சொல்லப்படும் நன்மை அமைச்சர்க்குச் செல்வம் ஆவதாம்; அந்நன்மை வேறு எவ்வகை நற்பேறுகளுள்ளும் அடங்காது தனிப்பட்டதாம்.மு. வரதராசனார் உரை

நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும்; அந்த நாநலம் தனிச்சிறப்புடையது. ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.G.U. Pope’s Translation

A tounge that rightly speaks the right is greatest gain,
It stands alone midst goodly things that men obtain.

 – Thirukkural: 641, Power of Speech, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.