அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் – குறள்: 46

Thiruvalluvar

அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்துஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்.
– குறள்: 46

– அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம்கலைஞர் உரை

அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் இல்லறவாழ்க்கையை அதற்குரிய அறநெறிப்படி நடத்துவானாயின்; அதற்குப் புறம்பாகியதுறவு நெறியிற் போய்ப் பல்வகையில் துன்புறுவதல்லது சிறப்பாகப் பெறும் பயன் யாது?மு. வரதராசனார் உரை

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?G.U. Pope’s Translation

If man in active household life a virtuous soul retain,What fruit from other modes a virtue can he gain?

 – Thirukkural: 46, Domestic Life, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.