அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் – குறள்: 713

Thiruvalluvar

அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகைஅறியார் வல்லதூஉம் இல்.
– குறள்: 713

– அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்
படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம் பேசும் அவையின் திறத்தை யறியாது. அதன் முன் ஒன்று சொல்லுதலை ஏற்றுக்கொண்டவர்; சொல்லுதலின் கூறுபாட்டை அறியாதவராவர்; அதோடு, அவர் கற்றுத் தேர்ந்த கலையும் அவர் கல்லாததாகக் கருதப்படும்.



மு. வரதராசனார் உரை

அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே; அவர் சொல்லவல்லதும் இல்லை.



G.U. Pope’s Translation

Unversed in councils, who essays to speak,
Knows not the way of suasive words, – and all is weak.

 – Thirukkural: 713, The Knowledge of the Council Chamber, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.