ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் – குறள்: 714

Thiruvalluvar

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.
– குறள்: 714

– அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன்விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்புபோல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறிவால் விளங்குவார்முன் தரமும் அறிவுச்சுடராக விளங்குக; அறிவில்லாத வெள்ளைகள்முன் வெள்ளையான சுண்ணச்சாந்தின் நிறத்தைக் கொள்க.



மு. வரதராசனார் உரை

அறிவிற் சிறந்தவரின்முன் தாமும் அறிவிற் சிறந்தவராய்ப் பேச வேண்டும்; அறிவில்லாதவர் முன் தாமும் வெண் சுண்ணம்போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.



G.U. Pope’s Translation

Before the bright ones shine as doth the light! Before the dull ones be as purest stucco white!

 – Thirukkural: 714, The Knowledge of the Council Chamber, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.