காதன்மை கந்தா அறிவுஅறியார்த் – குறள்: 507

Thiruvalluvar

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.
– குறள்: 507

அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை
மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பேரன்புடைமையைப் பற்றுக் கோடாகக் கொண்டு ; தம் வினைக்கு அறியவேண்டியவற்றை அறியாதாரைத் தெளிந்து அமர்த்துதல் ; அரசனுக்கு அறியாமையால் விளையுந் தீங்குகள் பலவற்றையும் உண்டாக்கும்.



மு. வரதராசனார் உரை

அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித் தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையையும் கொடுக்கும்.



G.U. Pope’s Translation

By fond affection led who trusts in men of unwise soul, Yeilds all his being up to folly’s blind control.

 – Thirukkural: 507, Selection and Confidence, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.