அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல். – குறள்: 909
– அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள்.
கலைஞர் உரை
ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி
இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அறச்செயலும்; ஆன்ற பொருளும்-அதைச் செய்தற்கு வேண்டிய பொருள் முயற்சியும்;அவ்விரண்டின் வேறான இன்ப நுகர்ச்சிகளும்; தம் மனைவிக்கு அடங்கி நடப்பவரிடம் இல்லனவாம்.
மு. வரதராசனார் உரை
அறச் செயலும் அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும் மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
G.U. Pope’s Translation
No virtuous deed, no seemly wealth, no pleasure, rests
With them who live obedient to their wives’ behests.
– Thirukkural: 909, Being led by Women, Wealth.
Be the first to comment