அஞ்சாமை அல்லால் துணைவேண்டா – குறள்: 497

Thiruvalluvar

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தான் செயின்.
– குறள்: 497

அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள்கலைஞர் உரை

ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச்
செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசர் பகையிடத்திற் செய்யும் வினைத்திறங்களை யெல்லாம் குறைவற எண்ணி அவற்றை இடத்தொடு பொருந்தச் செய்வாராயின் ; வெல்வதற்குந் திடாரிக்கம் ஒன்றிருந்தாற்போதும் , வேறுதுணை வேண்டியதில்லை .மு. வரதராசனார் உரை

(செய்யும் வழிவகைகளைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.G.U. Pope’s Translation

Save their own fearless might they need no other aid, If in right place they fight, all due provision made.

 – Thirukkural: 497, Knowing the Place, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.