
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண். – குறள்: 983
– அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
எல்லார் மேலுமுள்ள அன்பும், பழி தீவினைகள் செய்யப் பின்வாங்கும் நாணமும் , வேளாண்மையும் ; எளியார்க்கும் சட்ட நெறியறியார்க்குங் காட்டுஞ் சிறப்பிரக்கமும் ; உண்மை யுடைமையும் என; சான்றாண்மையென்னும் மண்டபத்தைத் தாங்குந் தூண்கள் ஐந்தாம்.
மு. வரதராசனார் உரை
அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து பண்புகளும் சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.
G.U. Pope’s Translation
Love, modesty, beneficence, benignant grace,
With truth, are pillars five of perfect virtue’s resting place.
– Thirukkural: 983, Perfectness, Wealth

Be the first to comment