முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி – குறள்: 708

Thiruvalluvar

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்.
– குறள்: 708

– அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள்கலைஞர் உரை

அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர்,
ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

புறக்குறிப்புகளைக் கருவியாகக் கொண்டு அரசனின் உள்ளத்தை நோக்கி அதிலுள்ள கருத்தை அறியவல்ல அமைச்சரை ஆட்சித்துணையாகக் பெற்றால்; அரசன் அவ்வமைச்சரின் முகத்தை நோக்கி எதிரே நின்றாற் போதும்; தன் வாய்திறந்து ஒன்றுஞ் சொல்லவேண்டியதில்லை. அவர் தாமாகச் செய்தியை அறிந்து கொள்வார்.மு. வரதராசனார் உரை

உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால்,(அவரிடம் எதையும் கூறாமல்) அவருடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.G.U. Pope’s Translation

To see the face is quite ehough, in presence brought, When men can look within and know the lurking thought.

 – Thirukkural: 708, The Knowledge of Indication, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.