அச்சமே கீழ்களது ஆசாரம் – குறள்: 1075

Thiruvalluvar

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது. – குறள்: 1075

– அதிகாரம்: கயமை, பால்: பொருள்



கலைஞர் உரை

தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது
கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கீழ்மக்களது ஒழுக்கமெல்லாம் தீயொழுக்கங் கண்டுபிடிக்கப்படின் அரசனால் தண்டனைவரும் என்று அஞ்சும் அச்சத்தினால் ஏற்படுவதே; அச்சமில்லாத வழியில், தம்மால் விரும்பப்படும் பயன் விளையுமாயின் அதனாற் சிறிது ஒழுக்கமுண்டாம்.



மு. வரதராசனார் உரை

கீழ்மக்களின் ஆசாரத்திற்குக் காரணமாக இருப்பது அச்சமே; எஞ்சியவற்றில், அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.



G.U. Pope’s Translation

Fear is the base man’s virtue; if that fail,
Intense desire some little may avail.

 – Thirukkural: 1075, Baseness, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.