உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் – குறள்: 294

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன். – குறள்: 294

– அதிகாரம்: வாய்மை, பால்: அறம்கலைஞர் உரை

மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள்
மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகுவனாயின்; அவன் உயர்ந்தோ ருள்ளத்திலெல்லாம் உளனாவன்.மு. வரதராசனார் உரை

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால், அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.G.U. Pope’s Translation

True to his inmost soul who lives,-enshrined
He lives in souls of all mankind.

 – Thirukkural: 294, Veracity, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.