54 பணியிடங்கள் – பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவிகளுக்கான வேலைவாய்ப்புகள் (54 Faculty Positions Open at Bharathidasan University – Year 2019)

Faculty Positions at Bharathidasan University

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 54 பணியிடங்கள் – உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர்கள் தேவை – Faculty Positions at Bharathidasan University

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் (Faculty Positions at Bharathidasan University) ஆகிய பதவிகளில் மொத்தம் 54 பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்களை வரவேற்கிறது.

கலை, அறிவியல், கல்வி, சமூக அறிவியல், மொழிகள், மேலாண்மை போன்ற துறைகளில் முதுகலை / முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றவர்கள் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்கள், உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சில பாடப்பிரிவுகளில் முதுகலை / முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றவர்களுக்கு, UGC / CSIR நடத்தும் NET தேர்வு அல்லது UGC அங்கீகாரம் பெற்ற SLET/SET போன்ற தேர்வுகள் கூடுதல் தகுதியாகத் தேவைப்படுகிறது (விரிவான விவரங்களுக்குப் பல்கலைக்கழக வேலைவாய்ப்புப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள தகுதி வரம்பைப் பார்க்கவும்).

பணியிடங்களின் எண்ணிக்கை

  • உதவிப் பேராசிரியர்கள் (Assistant Professors) = 26
  • இணைப் பேராசிரியர்கள் (Associate Professors) = 14
  • பேராசிரியர்கள் (Professors) = 14

இறுதித் தேதி

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய இறுதித் தேதி: 09-ஆகஸ்டு-2019

மேலும், தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை போன்ற விவரங்களுக்குப் பாரதிதாசன் பல்கலைக்கழக இணைய முகவரியைச் சொடுக்கிப் பார்க்கவும்:

பாரதிதாசன் பல்கலைக்கழகம் – உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் http://www.bdu.ac.in/teaching-positions.php



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.