யாழ் இரட்டையர் (Harp Twins) / இரட்டை யாழினியர் (Twin Harpists)

Harp Twins

இரட்டை யாழினியர் (Twin Harpists) / யாழ் இரட்டையர் (Harp Twins)

யாழ் என்று சொன்னாலே இனிக்கும்! நம்மில் பலர் மறந்துவிட்ட அல்லது அறியாத நம் பண்டைய இசைக்கருவிகளில் ஒன்று யாழ் (Harp). இந்த இனிய இசைக்கருவியை (கம்பிக்கருவி / String Instrument) இன்றும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இசைக் கலைஞர்கள் பலர் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் பெரும் புகழ் பெற்றவர்களில் யாழ் இரட்டையர்கள் (Harp Twins) மிக முக்கியமானவர்கள். ஆம்! அமெரிக்காவில் வாழும் கமீல் (Camille) மற்றும் கென்னெர்லி (Kennerly) என்ற இரட்டைச் சகோதரிகள் தான் இந்த சாதனையாளர்கள்!

சிறுவயது முதல் யாழ் மீது அளவற்ற பற்று கொண்டிருக்கும் இந்த இரட்டையர்கள், பல யாழிசை விழாக்கள் / கச்சேரிகளை, முன்னாள் அமெரிக்க அதிபர்கள், முன்னாள் அமெரிக்க துணை அதிபர்கள், மற்றும் உலக தலைவர்கள் முன்னிலையில் நடத்தியுள்ளனர். இவர்களது இசை நிகழ்ச்சிகள் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்கள் மற்றும் பிரிட்டனில் நடைபெற்றுள்ளன. மேற்கத்திய பாரம்பரிய இசை, மேற்கத்திய அதிரடி (ராக் / Rock) இசை, என்று எப்படிப்பட்ட இசையையும் யாழ் மட்டுமே கொண்டு இசைக்கின்றனர். இவர்கள் மீட்டும் யாழிசையை கேட்க பல லட்சக் கணக்கான விசிறிகள் உலகம் முழுவதும் உள்ளனர். இவர்களது இசைத் தொகுப்புகளுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு உள்ளது.

புகழ்பெற்ற மேற்கத்திய பாடல்கள், ஹாலிவுட் திரைப்படங்களின் மைய இசை (Theme Music) மற்றும் திரைப்பாடல்கள் ஆகியவற்றை யாழைக் கொண்டு மீட்டுகின்றனர்.

கரீப்பிய கொள்ளையர்கள் (பைரேட்ஸ் ஆஃப் தி கரீப்பியன் – Pirates of the Caribbean) படத்தின் மைய இசையை (Theme Song) அந்தப் படத்தில் இடம் பெறுவது போலவே அமைந்த அதே சூழலில், அப்படத்தின் கடல் கொள்ளையர்கள் போலவே ஆடையணிந்து யாழ் இரட்டையர் இசை மீட்டுவதைக் கீழ்க்கண்ட காணொளியைச் சொடுக்கிக் காணலாம்:

அடுத்து, கீழ்க்கண்ட காணொளியில் கிளேடியேட்டர் படத்தின் சூழல் மற்றும் ஆடையலங்காரங்களுடன், அப்படத்தின் மையப்பாடலை யாழிசையாக கமீல் மற்றும் கென்னெர்லி மீட்டுவதைக் காணலாம்:

இதே போல் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ், ஐயன் மெய்டென், மெட்டாலிக்கா, டைட்டானிக், என்று யாழிசை வடிவில் மாறியிருக்கும் மேற்கத்திய புகழ்பெற்ற பாடல்கள் பற்பல! சில பாடல்களை இருவரும் ஒரே யாழ் கொண்டு மீட்டி நம்மை வியக்க வைக்கின்றனர்!

யாழ் இரட்டையரின் அதிகாரப்பூர்வ இணைதள முகவரி:

யாழ் இரட்டையர் (Harp Twins)



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.