ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு – முது நிலைப் பட்டப்படிப்புகள் – IISc Bangalore – Graduate Studies – Research and Course Programmes – PhD, Integrated PhD, MTech (Research), MTech, MDes, MMgt
இந்தியாவில் கல்வி நிறுவங்களின் வரிசையில் முதல் இடம் வகிக்கும் நிறுவனமான இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு (Indian Institute of Science – IISc, Bangalore) முது நிலைப் பட்டப் படிப்புகளுக்கான (IISc PG Admissions – 2019 – Graduate Studies in Research and Course Programmes) விண்ணப்பங்களை வரவேற்கிறது.
அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் PhD, Integrated PhD, MTech (Research), MTech, MDes, MMgt போன்ற ஆராய்ச்சி அல்லது வழக்கமான பட்டப் படிப்புகளில் படிக்க விரும்புவோர், தங்களது விண்னப்பங்களை இணைய வழியில் பதிவு செய்யலாம். IISc, முதுநிலை / ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு, மாதம் தோறும் மாணவர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப உதவித்தொகை அளிக்கிறது.
முதுநிலை / ஆராய்ச்சிப் படிப்புகளை IISc, Bangalore-ல் சேர்ந்து படிக்க விரும்புவோர், இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், இணைய வழியில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 25-மார்ச்-2019.
ஏற்கனவே இருக்கும் MTech பிரிவுகளுடன், மேலும் ஒரு புதிய MTech சிறப்புப் பிரிவு, அதாவது, எம்.டெக். செயற்கை நுண்ணறிவுப் (MTech Aritificial Intelligence) பிரிவு, வரும் ஆகஸ்டு 2019 முதல் தொடங்கவிருக்கிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் இந்தப் பிரிவிலும் (கல்வித் தகுதியின் அடிப்படையில்) சேர்ந்து படிக்கலாம்.
மேலும், கல்வித்தகுதி, சேர்க்கை முறை, விண்ணப்பப் பதிவு முறை, போன்ற விவரங்களை அறிய IISc, Bangalore-ன் இணையதளத்தைப் பார்க்கவும்.
Be the first to comment