பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இளநிலை அறிவியலில் (B.Sc) என்ன படிக்கலாம்? – Optional Disciplines in B.Sc Degree Course after +2

Disciplines in B.Sc

இளநிலை அறிவியல் (B.Sc) பட்டப் படிப்பில் உள்ள பிரிவுகள் (Optional Disciplines in B.Sc Degree Course after +2)

பன்னிரண்டாம் வகுப்பு (10+2 / HSc) முடித்ததும், இளநிலை அறிவியல் பட்டப் படிப்பு (பி.எஸ்.சி. – B.Sc.) பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில், பி.எஸ்.சி-யில் பொதுவாக என்னென்ன பிரிவுகள் (Disciplines in B.Sc) உள்ளன என்ற பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப்பட்டியலில் தற்காலத்தில் பல்கலைக்கழங்களில் பொதுவாக உள்ள பாடப்பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில் இல்லாத பிரிவுகளும் சில கல்லூரிகளில் இருக்கலாம். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இப்பட்டியல் ஒரு வழிகாட்டுதலுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.

  • பி.எஸ்.சி. இயற்பியல் – B.Sc Physics
  • பி.எஸ்.சி. இயற்பியல் – கணிப்பொறிப் பயன்பாடுகளுடன் – B.Sc Physics with Computer Applications

  • பி.எஸ்.சி. கணிதம் – B.Sc Mathematics
  • பி.எஸ்.சி. புள்ளியியல் – B.Sc Statistics
  • பி.எஸ்.சி. கணிதம் – கணிப்பொறிப் பயன்பாடுகளுடன் – B.Sc Mathematics with Computer Applications

  • பி.எஸ்.சி. வேதியியல் – B.Sc Chemistry
  • பி.எஸ்.சி. உயிர்மவேதியியல் – B.Sc Biochemistry

  • பி.எஸ்.சி. தாவரயியல் – B.Sc Botany
  • பி.எஸ்.சி. தாவர உயிரியல் மற்றும் உயிர்த்தொழில்நுட்பம் – B.Sc Plant Biology and Biotechnology
  • பி.எஸ்.சி. விலங்கியல் – B.Sc Zoology
  • பி.எஸ்.சி. மேம்பட்ட விலங்கியல் மற்றும் உயிர்த்தொழில்நுட்பம் – B.Sc Advanced Zoology and Biotechnology
  • பி.எஸ்.சி. உயிர்த்தொழில்நுட்பம் – B.Sc Biotechnology
  • பி.எஸ்.சி. நுண்ணுயிரியியல் – B.Sc Microbiology

  • பி.எஸ்.சி. பட்டுப்புழு வளர்ப்பு – B.Sc Sericulture

  • பி.எஸ்.சி. கணினி அறிவியல் – B.Sc Computer Science
  • பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் – B.Sc Information Technology
  • பி.எஸ்.சி. மென்பொருள் பயன்பாடு – B.Sc Software Application

  • பி.சி.ஏ – இளநிலை கணிப்பொறிப் பயன்பாடுகள் – BCA – Bachelor of Computer Applications

  • பி.எஸ்.சி. மின்னணு மற்றும் தொடர்பு அறிவியல் – B.Sc Electronics and Communication Science

  • பி.எல்.ஐ.எஸ்.சி. நூலகத் தகவல் அறிவியல் – B.L.I.Sc Library Informtion Science

  • பி.எஸ்.சி. மின்னணு ஊடகம் – B.Sc Electronic Media
  • பி.எஸ்.சி. பல்ஊடகம் – B.Sc Multimedia
  • பி.எஸ்.சி. முப்பரிமாண அசைவூட்டல் – B.Sc 3D Animation
  • இளநிலை தொழில்சார்ந்த முப்பரிமாஂண அசைவூட்டல் B.Voc. 3D Animation
  • பி.எஸ்.சி. காட்சித் தொடர்பு – B.Sc Visual Communication
  • பி.எஸ்.சி. எண்மின் (டிஜிட்டல்) பதிப்பு – B.Sc Digital Publishing
  • பி.எஸ்.சி. மக்கள் தகவல் தொடர்பியல் – B.Sc Mass Communication
  • இளநிலை எண்மின் (டிஜிட்டல்) இதழியல் – B.Voc. Digital Journalism

  • பி.எஸ்.சி. புவியியல் – B.Sc Geography
  • பி.எஸ்.சி. நிலவியல் – B.Sc Geology
  • பி.எஸ்.சி. வானிலையியல் – B.Sc Meteorology
  • பி.எஸ்.சி. கடலியல் – B.Sc Oceanography
  • பி.எஸ்.சி. கடல் அறிவியல் – B.Sc Nautical Science

  • பி.எஸ்.சி. மனிதயினயியல் – B.Sc Anthropology
  • பி.எஸ்.சி. தடய அறிவியல் – B.Sc Forensic Sciences
  • பி.எஸ்.சி. உளவியல் – B.Sc Psychology

  • பி.எஸ்.சி. உணவியல் மற்றும் உணவூட்டவியல் – B.Sc Dietetics and Nutrition
  • பி.எஸ்.சி. மனை அறிவியல் -B.Sc Home Science
  • பி.எஸ்.சி. மனை அறிவியல் – மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவூட்டவியல் – B.Sc Home Science – Clinical Nutrition and Dietetics
  • பி.எஸ்.சி. மனை அறிவியல் – உட்புற வடிவமைப்பு மற்றும் அலங்காரம் – B.Sc Home Science-Interior Design and Décor
  • பி.எஸ்.சி. மனை அறிவியல் – B.Sc Home Science- Nutrition, Food Service Management and Dietetics – ஊட்டச்சத்து, உணவு சேவை மேலாண்மை மற்றும் உணவூட்டயியல்

  • பி.எஸ்.சி. உணவுத் தொழில்நுட்பவியல் – B.Sc Food Technology
  • பி.எஸ்.சி. பால்வள தொழில்நுட்பவியல் – B.Sc Dairy Technology

  • பி.எஸ்.சி. விடுதி மேலாண்மை – B.Sc Hotel Management
  • பி.எஸ்.சி. விடுதி மற்றும் உணவு சேவை மேலாண்மை – B.Sc Hotel and Catering Management


  • பி.எஸ்.சி. நவநாகரிக வடிவமைப்பு – B.Sc Fashion Technology

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.