IISc Bangalore – 4-Year BS (Research) – இளநிலை சேர்க்கைகள் – IISc UG Admissions 2020

IISc UG Admissions 2020

IISc Bangalore – 12-ஆம் வகுப்பு முடித்தோருக்கான 4-ஆண்டு BS (Research) – இளநிலை அறிவியல் (ஆராய்ச்சி)ப் படிப்பு – 2020 – IISc UG Admissions 2020

நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு (10​+2 / HSC / PUC) முடித்தவரா அல்லது படித்துக்கொண்டு இருப்பவரா? உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே, நீங்கள் அறிவியல் அறிஞர் (விஞ்ஞானி / Scientist)  ஆக வேண்டும் என்ற கனவு உள்ளவரா? பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science, Bangalore / IISc Bangalore) உங்கள் கனவை நனவாக்க வழி வகுக்கும். இந்தியாவின் முதல் தர கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான IISc Bangalore, 4-ஆண்டு Bachelor of Science (Research) / BS (Research) – இளநிலை அறிவியல் (ஆராய்ச்சி)ப் படிப்பிற்கான விண்ணப்பங்களை (IISc UG Admissions 2020) வரவேற்கிறது. 

உலகத் தரம் வாய்ந்த, 111 ஆண்டுகள் பழமை வாய்ந்த, இந்திய அரசின், இந்த சிறந்த கல்வி நிறுவனம் பற்றி பெரும்பாலான மாணவர்கள் அறிந்து இருப்பதில்லை. அனைத்து மாணவர்களும், குறிப்பாக, கிராமப்புற மாணவர்களும் இக்கல்வி நிறுவனம் பற்றிய விழிப்புணர்வைப் பெற வேண்டும்.   இக்கல்வி நிறுவனத்தின் இந்த ஆராய்ச்சிப் படிப்பு,  ஏழை, எளிய, தகுதி வாய்ந்த மாணவர்கள், முன்னேற மிகவும் உதவும்.

இந்த 4-ஆண்டு BS (Research) படிப்பு, பல துறைகளின் சிறப்புத்தன்மைகளை உள்ளடக்கியது. இது ஒரு அறிவியல் சார்ந்த இளநிலைப் படிப்பு என்றாலும், பொறியியல் துறையின் சிறப்புகளையும் கொண்டது. மேலும், சமூக அறிவியல் துறைகளையும், இப்படிப்பின் மூலம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. IISc, BS (Research) படிப்பை, ஆறு முக்கிய துறைகளில் மாணவர்களுக்கு அளிக்கிறது. அதாவது,  (1) இயற்பியல் (Physics) (2) வேதியியல் (Chemistry) (3) உயிரியல் (Biology) (4) கணிதம் (Mathematics) (5) மூலப்பொருட்கள் (Materials) (6) புவி மற்றும் சுற்றுப்புற அறிவியல்  (Earth & Environmental Science)  ஆகிய ஆறு முக்கிய துறைகளில், ஏதேனும் ஒன்றில் மாணவர்கள் BS (Research) பட்டம் பெற முடியும்.

கல்விக் கட்டணமும் மிக மிகக் குறைவு. கல்வி உதவித் தொகையும் அளிக்கப்படும்.

இந்தப் படிப்பின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நான்காம் ஆண்டின் இறுதியில் BS (Research) பட்டம் பெற தகுதியுடைய மாணவர்கள், அவர்களுக்கு விருப்பம் இருப்பின், ஐந்தாவது ஆண்டு படித்து, முதுநிலை அறிவியல் (Masters Degree / MS ) பட்டம் பெறலாம்.

தகுதி

பன்னிரண்டாம் வகுப்பு (10+2 / HSC / PUC II Year) மற்றும் KVPY அல்லது IIT-JEE அல்லது NEET-UG போன்ற தேசிய அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். மேலும் மாணவர்கள், கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics) மற்றும் வேதியியல் (Chemistry) ஆகிய பாடங்களை, பன்னிரெண்டாம் வகுப்பில் (10+2 / HSC / PUC) கட்டாயம் படித்து இருக்கவேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்

மாணவர்கள் IISc-ன் இணைய வழியில் 30-04-2020-ஆம் தேதிக்குள் BS (Research) படிப்பிற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். 30-04-2020-ஆம் தேதி, 23:59 மணி வரை இணைய வழியே விண்ணப்பிக்க முடியும்.

மேலும், கல்வித் தகுதி, சேர்க்கை முறைகள் இட ஒதுக்கீடு போன்ற முழு விவரங்களையும், அறிந்து கொள்ள  IISc-ன் கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணைய தளத்தைப் பார்க்கவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.