
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். – குறள்: 540
– அதிகாரம்: பொச்சாவமை, பால்: பொருள்
கலைஞர் உரை
கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அரசன் தான் கருதிய பொருளைத் தான் கருதியவாறே பெறுதல் எளிதாம்; தான் எண்ணியதைப் பின்னும் விடாது எண்ணக் கூடுமாயின்.
மு.வரதராசனார் உரை
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.
G.U. Pope’s Translation
‘Tis easy what thou hast in mind to gain,
If what thou hast in mind thy mind retain.
– Thirukkural: 540, Unforgetfulness, Wealth

 
		 
		
Be the first to comment