பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் – குறள்: 322

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
. – குறள்: 322

– அதிகாரம்: அருளுடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக்கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.



ஞா. தேவநேயப் பாவாணர்

கிடைத்த உணவை இயன்றவரை பசித்தவுயிர்கட்குப் பகுத்துக் கொடுத்துண்டு பல்வகை உயிர்களையும் பாதுகாத்தல், அறநூலோர் இருவகை அறத்தார்க்கும் தொகுத்த அறங்களெல்லா வற்றுள்ளும் தலையாயதாம்.



மு.வரதராசனார் உரை

கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.



G.U. Pope’s Translation

Let those that need partake your meal; guard everything that lives;
This the chief and sum of lore that hoarded wisdom gives.

– Thirukkural: 322, Not Killing, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.