
பென்குயின் பென்குயின்-குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்
பென்குயின் பென்குயின் பென்குயின்
பென்குயின் எங்கள் பெயர்தானே
தென்துருவம் எங்கள் வீடுதானே
கருப்பு வெள்ளை நிறம்தானே
மஞ்சள் கொஞ்சும் அழகுதானே
தென்துருவம் எங்கள் வீடுதானே
குழந்தைப் போல நடப்போமே
கூட்டம் கூட்டமாய் திரிவோமே
தென்துருவம் எங்கள் வீடுதானே
பறக்க முடியா பறவைதானே
பாய்ந்து குதிப்போம் நீரில்தானே
தென்துருவம் எங்கள் வீடுதானே
தத்தித் தத்தி நடப்போமே
பனியில் சறுக்கி ஆடுவோமே
தென்துருவம் எங்கள் வீடுதானே
முட்டை இட்டு காப்போமே
குஞ்சுகள் பொரிந்திட வளர்ப்போமே
தென்துருவம் எங்கள் வீடுதானே
பென்குயின் பென்குயின் பென்குயின்
பென்குயின் எங்கள் பெயர்தானே
தென்துருவம் எங்கள் வீடுதானே!

Be the first to comment