செல்ல பெயர்கள்! – பேபிகார்ன்… பேபிகார்ன் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்
பேபிகார்ன் பேபிகார்ன்
செல்ல பெயரம்மா
அம்மா கூப்பிடவே ஓடி போவேன்மா
பூந்தி லட்டு பூந்தி லட்டு
செல்ல பெயரம்மா
அப்பா கூப்பிடவே ஓடிபோவேன் மா
அப்புனு பப்புனு அப்புனு பப்புனு
செல்ல பெயரம்மா
அக்கா கூப்பிடவே ஓடி போவேன்மாஅத்துனு புத்துனு அத்துனு புத்துனு
செல்ல பெயரம்மா
அத்த கூப்பிடவே ஓடி போவேன்மாகன்னு குட்டி கன்னு குட்டி
செல்ல பெயரம்மா
மாமா கூப்பிடவே ஓடி போவேன்மாகுட்டி பாப்பா குட்டி பாப்பா
பாட்டி கூப்பிடம்மா
ஓடிப்போய் பாட்டி மடியில் நான் தூங்குவேம்மாசெல்லக் குட்டி செல்லக் குட்டி
ஊரே கூப்பிடம்மா
ஓடிப்போய் சிரிப்பேனே நானும் தானேம்மா
அஹஹா அஹஹா அஹஹா ….

Be the first to comment