அணில் பிள்ளை – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி
அணிலே அணிலே வா அணிலே,
அழகு குட்டியே வா அணிலே!
பழங்கள் உனக்கு தருவேனே
சிட்டே பட்டே வா அணிலே!
மூன்று கோடு உன் முதுகில்,
ஆடி மகிழு உன் மரத்தில்!
பஞ்சுபோல் இருக்கும் உன் காது,
என்னிடம் நீயும் விளையாடு
திராட்சை போல உன் கண்கள்
உன்னைக் கொஞ்சும் குழந்தைகள்!
– தி. யாழினி

Be the first to comment