கிழமை – பாரதிதாசன் கவிதை
ஞாயிறுதான் ஒன்று-பின்
நல்ல திங்கள் இரண்டு
வாயிற் செவ்வாய் மூன்று-பின்
வந்த புதன் நான்கு
தூய்வியாழன் ஐந்து-பின்
தோன்றும் வெள்ளி ஆறு
சாயும்சனி ஏழு– இதைத்
தவறாமற் கூறு.
ஞாயிறுதான் ஒன்று-பின்
நல்ல திங்கள் இரண்டு
வாயிற் செவ்வாய் மூன்று-பின்
வந்த புதன் நான்கு
தூய்வியாழன் ஐந்து-பின்
தோன்றும் வெள்ளி ஆறு
சாயும்சனி ஏழு– இதைத்
தவறாமற் கூறு.
கரடி பொம்மை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி கரடி பொம்மை வாங்ககடைக்கு வந்தோம் நாங்க! கேட்ட பொம்மை தாங்ககாசு தருவோம் நாங்க விலை பேசி வாங்கவந்து இருக்கோம் நாங்க ரோஜா வண்ணக் கரடிஎடுத்துத் தாங்க நீங்க!
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. – குறள்: 661 அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் விளக்கம்: மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.
மழை வந்தால் மகிழ்ச்சியேஊரெல்லாம் குளிர்ச்சியே! மயில் வந்து ஆடுமேகுயில் வந்து பாடுமே வெள்ளம் அது ஓடுமேபள்ளம் நோக்கிப் பாயுமே பயிர்ச் செடிகள் செழிக்குமேபூக்கள் எல்லாம் பூக்குமே காய் கனிகள் காய்க்குமே உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment