யாதானும் நாடாமால் ஊராமால் – குறள்: 397

Thiruvalluvar

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. – குறள்: 397

– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்



கலைஞர் உரை

கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு
என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது
ஏனோ?



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நிரம்பக்கற்றவனுக்கு எந்நாடுந் தன்னாடாம், எவ்வூருந்தன்னூராம்; அங்ஙனமிருக்கவும், ஒருவன்தான் இறக்குமளவும் கல்லாது காலங்கழிப்பது எதன் பொருட்டு?



மு. வரதராசனார் உரை

கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?



G.U. Pope’s Translation

The learned make each land their own, in every city find a home;
Who, till they die; learn nought, along what weary ways they roam!

Thirukkural: 397, Learning, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.