விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் – குறள்: 648

Thiruvalluvar

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
– குறள்: 648

– அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள், இயல்: அமைச்சியல்கலைஞர் உரை

வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துகளைச் சொல்லும்
வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சொல்ல வேண்டிய செய்திகளை ஒழுங்கான வரிசைப்படுத்தி இனிதாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவர் ஏவல்கேட்டு நடக்கும்.மு. வரதராசனார் உரை

கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.G.U. Pope’s Translation

Swiftly the listening world will gather round,
When men of mighty speech the weighty theme propound.

 – Thirukkural: 648, Power of Speech, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.